கிறிஸ்டியானோ ரொனால்டோ வாங்கிய காஸ்ட்லிக் கார். விலையைக் கேட்டால் அசந்து விடுவீர்கள்!!

0
14

கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் மிகவும் அரிதானதும், விலை கொண்டதுமான Bugatti La Voiture Noire காரை முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகில் இந்த ரக கார்கள் மொத்தம் 10 மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றை தான் ரொனால்டோ வாங்கியிருக்கிறார்.

இக்காரின் விலை இந்திய மதிப்பில் சுமார் 75 கோடி ரூபாயாகும். இது பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

இந்தக் கார் அதிகபட்சமாக மணிக்கு 380 கிமீ வேகத்திலும் வெறும் 2.4 நொடிகளில் 60 கிமி வேகத்தை எட்டிப்பிக்கும் திறன்கொண்டதாகும்.

அதுமட்டுமின்றி ரொனால்டோ தனது பெயரின் இனிஷியலை காரின் நம்பர் பிளேட்டில் CR என்று பொறித்துள்ளார்.

இக்கார் அடுத்த ஆண்டில் ரொனால்டோவிற்கு டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரொனால்டோவிடம் Bugatti Veyron Grand Sport Vitesse, Ferrari F430, Phantom Rolls-Royce, Lamborghini Aventador, Maserati GranCabrio, the Bentley Continental GTC மற்றும் McLaren Senna போன்றவ விலையுயர்ந்த கார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.