கிளிநொச்சியில் அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட குகை, இருவர் கைது!

0
15

கிளிநொச்சி தர்மபுர பகுதியில் கசிப்பு குகை ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கின்சிளி கேரத் தலைமையில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் தருமபுர பொலிசார் மற்றும் கிளிநொச்சி சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த சுற்றிவளைப்பு நடைபெற்றது.

சட்டவிரோத செயற்பாடுகளை ஒழிக்கும் நடவடிக்கை நேற்றைய தினம் முதல் இடம்பெற்ற வருவதாகவும், இரண்டாவது நாளான இன்று கட்டைக்காடு பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியிலீடுபட்ட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களிடமிருந்து 176 லீற்றர் கசிப்பும் 1190 லீற்றர் கோடாவும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் 7 என்பனவும் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் தருமபுர பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர் என தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கின்சிளி கேரத் தெரிவித்தார்.