கிளிநொச்சி- புதுக்காட்டுச் சந்தியில் இடம்பெற்ற விபத்தில்….

0
11

கிளிநொச்சி- புதுக்காட்டுச் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புலோப்பளை மேற்கை சேர்ந்த 56 வயதான கிருஸ்ணன் நவநீதன் என்பவரே உயிரிழந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர், புதுகாட்டுச் சந்தியில் திரும்பிய வேளை குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்தவரை சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில், அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்த வருகின்றனர்.