கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

0
52

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2018/2019 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட 2018/2019 கல்வியாண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 2020.10.12ம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்சம் காரணமாக கிழக்குப் பல்கலைக்கழக 2018/2019 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளது.

இவர்களது கல்வி நடவடிக்கைகள் ஆரம்பித்தல் தொடர்பான மீள் அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும் என்று பீடாதிபதி கலாநிதி ஜெ.கென்னடி அறிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது மக்கள் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு சுகாதாரப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.