குளறுபடி செய்து வெற்றிபெற்றாரா சுமாந்திரன்? இதோ அவரே தரும் விளக்கம் (வீடியோ)

0
495

மூன்றாவது இடத்தில் இருப்பவர் சுமந்திரன் அல்ல தர்மலிங்கம் சித்தார்த்தன்.

அத்தோடு வாக்கெண்ணும் நிலையத்தில் இருக்கும் அத்தனை பேரும் சுமந்திரனின் கையாட்கள் அல்ல. அப்படி அவர்கள் தேர்தல் முடிவை மாற்றக்கூடியவர்களாக இருந்தால் சுமந்திரனை முதலாவது இடத்திற்கு கொண்டுவந்தும் கஜேந்திரகுமாரை கடைசி இடத்திற்கு கொண்டுபோயும் இருப்பார்கள்.

முழுமையான வாக்கு விபரங்கள் வருவதற்கு முன்பதாக உத்தியோக பூர்வமற்ற செய்திகள் ஊடாகவே விருப்பு வாக்கில் சுமந்திரன் தோல்வி சசிகலா வெற்றி என்ற வதந்திகள் பரவிக்கொண்டிருந்தன. இவ்வாறான செய்திகள் வந்துகொண்டிருந்த சம நேரத்தில் மானிப்பாய் தொகுதிக்கான முழுமையான தேர்தல் முடிவுகள் கூட அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. தொகுதிக்கான தேர்தல் முடிவே அறிவிக்கப்பட்டிருக்காத நிலையில் விருப்பு வாக்கில் முன்னிலை பின்னிலையென்று நாமாகவே ஒரு முடிவுக்கு வந்துவிட முடியுமா?

கிளிநொச்சி தொகுதியில் அதிகூடிய விருப்பு வாக்குகள் பெற்றபடியால்தான் சிறீதரன் விருப்பு வாக்கில் முதலிடத்தில் உள்ளார். அங்கு ஒவ்வொரு வாக்கென்னும் நிலையங்களின் முடிவுகளிலும் சிறீதரனுக்கு 1400 விருப்பு வாக்கென்றால் ஏனைய சுமந்திரன், சசிகலா, சரவணபவான் போன்றோருக்கு 200, 100,50 என்றே கிடைத்திருந்தன. இதன் அர்த்தம் என்னவென்றால் கிளிநொச்சி மக்கள் தம்முடைய விருப்புவாக்கில் ஒன்றை மாத்திரமே அதிகம் பயன்படுத்தியுள்ளனர். நான் கூட என்னுடைய மூன்றாவது விருப்பு வாக்கினை யாருக்கும் இடவில்லை. கிளிநொச்சியில் கூட்டமைப்புக்கு கிடைத்த வாக்கில் 90% வீதமானவை சிறீதரனுக்கு மாத்திரமான வாக்காக கிடைத்திருந்தது.

யாழ்ப்பாணத்தில் அவ்வாறு அல்ல கட்சிக்குள் பலமுனை போட்டி நிலவியமையால் விருப்பு வாக்குகளும் பிரிக்கப்பட்டு ஒவ்வொருவரும் குறைந்தபட்ச வாக்குகளே பெற்றுள்ளனர்.

வாக்கெண்ணும் நிலையங்களில் பணிபுரிபவர்கள் அனைவரும் அதே பகுதிகளை சேர்ந்த ஆசிரியர்களும் அரச பணியாளர்களும்தான். அத்தனைபேரும் தமிழர்கள் எவரும் சிங்களவர்கள் இல்லை. அவர்களை கண்காணிக்கவும் பல அமைப்புக்கள் இருக்கின்றன. வாக்கிலே மோசடி செய்துவிட்டார்கள் எனக்கூறி அவர்கள் அத்தனைபேரையும் நீங்கள் கேவலப்படுத்துகின்றீர்கள். சுமந்திரனுக்காக தேர்தல் முடிவுகளை மாற்றவோ கூட்டவோ குறைக்கவோ அவர்களுக்கு எந்த அவசியமும் இல்லை.

கூடிய விருப்பு வாக்குகளை பெற்றவர்கள் வரிசையில் முதலிடத்தில் அங்கஜன் ராமநாதன் இருக்கிறார், 2 ஆம் இடம் சிறீதரன், 3 ஆம் இடம் டக்லஸ் தேவானந்தா, 4 ஆம் இடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 5 ஆம் இடம் சுமந்திரன், 6 ஆம் இடம் செல்வராசா கஜேந்திரன், 7 ஆம் இடம் தர்மலிங்கம் சித்தார்த்தன், 8 ஆம் இடம் சசிகலா ரவிராஜ்.

இதில் ஒருவர் வாக்கை இன்னொருவருக்கோ இன்னொருவர் வாக்கை மற்றொருவருக்கோ மாற்றி மோசடி செய்ய முடியாது. இதுவொன்றும் தென்னிலங்கையில் நடக்கும் தேர்தல் அல்ல எம்மவர்கள் கண்காணிப்பில் எம்மவர்கள் முன்னிலையில் நடந்த தேர்தல். வாக்கை எண்ணுவதும் முடிவை அறிவிப்பதும் எம்மவர்களே. சுமந்திரன் ஒன்று மாயாஜால வித்தை காட்டுபவர் அல்ல முடிவுகளை மாற்றி அறிவிக்க. அவருக்கு கிடைத்த விருப்பு வாக்குகள் இம்முறை பாதியாக குறைந்துள்ளது. இதுதான் கள யதார்த்தம் இதை விட்டு மடையர்கள் போன்று பேசிக்கொண்டு திரியாதீர்கள். தமிழ் சமூகம் படித்த சமூகம் என்று எல்லோரும் நம்பிக்கொண்டு இருக்கின்றனர். அதை காப்பாற்றுங்கள்.