கூகுளின் Meet கொன்பரன்ஸ் சேவையை பெறுவதற்கு புதிய அறிமுகம்

  0
  19

  கூகுள் நிறுவனமானது Duo வீடியோ கொன்பரன்ஸ் அப்பிளிக்கேஷனுக்கு சமாந்தரமாக Google Meet எனும் மற்றுமொரு வீடியோ கொன்பரன்ஸ் அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளமை தெரிந்ததே.

  இந்த அப்பிளிக்கேஷனைப் பயன்படுத்துவதற்கு தற்போது புதிய Shortcut ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  இதன்படி இணைய உலாவிகளில் இச் சேவையினைப் பெறுவதற்கு http://meet.new என தட்டச்சு செய்து குறித்த தளத்தினுள் உள்நுழைய முடியும்.

  இப் பகுதியில் கூகுளின் ஜிமெயில் கணக்கினைப் பயன்படுத்தி குறித்த சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

  அதேபோன்று ஜிமெயிலில் உள்நுழைந்த பின்னரும் அங்கு Google Meet சேவையைப் பெறுவதற்கான வழி ஏற்கணவெ தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.