கொரோனாவால் அடுத்து அடுத்து பாதிக்கப்படும் இந்தி நடிகர்கள் – அதிர்ச்சியில் திரையுலகம்

0
6

இந்தி திரைப்பட நடிகர் அர்ஜூன் கபூர் மற்றும் அவரது காதலியான மலைக்கா அரோராவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அர்ஜூன் கபூர் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் – எனக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனை உங்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்வது எனது கடமையாகும்.

நான் நலமுடன் இருக்கிறேன். எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

எனக்கு மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் வழங்கிய அறிவுரையின் படி வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

இதேவேளை மலைக்கா அரோராவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது குறித்து அவரது இளைய சகோதரி அம்ரிதா அரோரா உறுதிப்படுத்திள்ளமை குறிப்பிடத்தக்கது.