கொரோனாவின் தாக்கம் எப்போது வரைக்கும் இருக்கும் தெரியுமா? வெளியான அதிர்ச்சி செய்தி

0
37

கொரோனா வைரஸின் உலக பரவல் தாக்கமானது, பல தசாப்தங்களுக்கு நீடிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை குழு, கொவிட்-19 தொடர்பாக கடந்த ஆறு மாதங்களாக மேற்கொண்ட மதிப்பாய்வு அறிக்கையை வெளியிட்டு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் உறுப்பினர்கள் 18 பேரையும், ஆலோசகர்கள் 12 பேரையும்; உள்ளடக்கிய அவசரநிலை குழு, கொரோனா வைரஸ் தாக்கம் ஆரம்பமானதன் பின்னர், நான்காவது தடவையாக நேற்றிரவு ஜெனிவாவில் கூடியது.

நூற்றாண்டுக்கு ஒரு முறை சுகாதார நெருக்கடி நிலை ஏற்படும் நிலையில், கொவிட்-19 தொற்றின் தாக்கமானது அடுத்துவரும் பல தசாப்தங்களுக்கு உலகில் நீடி;க்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.