கொரோனாவுக்கான புதிய மருந்தை தயாரித்த இலங்கை… நாளை முதல் பயன்பாட்டுக்கு விடப்படுகின்றது

0
30

கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்புக்களைத் தடுப்பதற்காக இலங்கை சுதேச மருத்துவ அமைச்சால் ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுதேச மருத்துவத்தை ஊக்குவித்தல், கிராமப்புற மற்றும் ஆயுர்வேத மற்றும் பொது சுகாதார மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

ஆயுர்வேத திணைக்களமும் ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனமும் இணைந்து நோய் எதிர்ப்பு பானத்தையும் மருந்துத் தூளையும் அறிமுகப்படுத்தியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தயாரித்துள்ள புதிய மருந்து தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

100 சதவீத உள்ளூர் மூலிகைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள இந்த மருந்துகள் ‘சதங்கா பானம்’ மற்றும் ‘சுவாதாரணி நோய்த்தடுப்பு பானம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த மருந்துகள் இம்மாதம் 12 ஆம் திகதி முதல் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்.

தற்போதைய நிலைமையில் மேற்கத்தேய மருத்துவத்தால் இன்னும் கொரோனா வைரஸுக்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இருப்பினும், இந்தச் சவாலைச் சமாளிக்கக்கூடிய மருந்துகளை உற்பத்தி செய்யும் திறன் எமது சுதேச மருத்துவ அமைச்சுக்கு உள்ளது” என்றார்.

இதேவேளை இந்த மருந்துகள் நேற்றையதினம் நாடாளுமன்றத்திலும் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.