கொரோனா தொடர்பான உண்மை நிலவரங்களை வெளியிட்டமையினால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட இலங்கை மருத்துவர்…

0
137

இலங்கையின் கொரோனா நிலவரம் தொடர்பான உண்மைகளை மக்களுக்கு எடுத்துக் கூறியதாலேயே பொரள்ளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் மருத்துவர் ஜயருவான் பண்டாரவை அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சாடியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் செய்தியாளர் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர்,

நான் நியமித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் தற்போது நீக்கப்பட்டுள்ளார். அந்த பணிப்பாளர் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடனேயே முழுமையாக அரசியலில் ஈடுபட்டார். அவர் தனிப்பட்ட ரீதியில் நல்லவர். அவரது திறமையை பார்த்தே நான் அந்த பதவியில் நியமித்தேன். அவருக்கு நிறைவேற்று தரத்திலான தகுதி இருக்கவில்லை என்பதுதான் சிறிய பிரச்சினை.

5ம் வகுப்பு மாணவர்களுக்கான ஒரு அரிய சந்தர்ப்பம்!

  • இன்றே உங்கள் பரீட்சையை எழுதிப் பார்க்கலாம்                                                   
  • மாவட்ட ரீதியில் நீங்கள் எத்தனையாவது இடம் என்பதை அறியலாம்         
  • நாடு தழுவிய ரீதியில் நீங்கள் எத்தனையாவது இடம் என்பதை அறியலாம்
  • நீங்கள் எத்தனை சரி எடுத்தீர்கள், எத்தனை பிழை எடுத்தீர்கள் என்பதை உடனே பார்த்துவிட முடியும். www.o2o.lk

இதனால், அவரை நான் பதில் பணிப்பாளராக நியமித்தேன். மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மிகவும் பலவீனமாக இருந்தது, அதனை முன்னேற்றவே அவரை நியமித்தேன். அவர் அதனை முன்னேற்றினார்.

மருத்துவர் என்ற வகையில் அவர் அறிக்கைகளை வெளியிட்டார். அவர் அப்படியான அறிக்கைகளை வெளியிட்டாலும் அரசாங்கம் கொரோனா பரவல் முடிந்து விட்டது என்றே காட்டியது.

PCR பரிசோதனைக்கான கேள்வி மனுவையும் அரசாங்கம் இரத்துச் செய்தது. அவர் ஆதரித்த அரசாங்கமே அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தற்போது என்ன கூறுகிறது என்று நான் கேட்கிறேன்?. என ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.