கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு

0
9

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய மேலும் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 816 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 75 பேர் இன்றைய தினம் குணமடைந்து வைத்தியாசலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 514 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் 291 நோயாளர்கள் நாட்டில் உள்ள பல வைத்தியாசலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.