நாட்டில் நேற்று 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 3,111 ஆக உயர்வடைந்துள்ளது.
கட்டாரிலிருந்து வருகை தந்த ஐவரும், இந்தியாவிலிருந்து வருகை தந்த மூவரும், குவைத்திலிருந்து வருகை தந்த இருவரும் இவ்வாறு புதிய கொரோனா தொற்றாளர்களாக நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது வைத்தியசாலைகளில் 210 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 2,889 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் 80 நபர்களும் தொடர்ந்தும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.