கொரோனா தொற்றுக்கு உள்ளானவருக்கு 3 வருட சிறை

0
9

பஹ்ரைனில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர், தனது முக கவசத்தை வேண்டுமென்றே நீக்கிவிட்டு, மருத்துவ ஊழியர்களுக்கு முன் இருமியதுடன் கொரோனா தொற்றை பரப்பும் வகையில் செயற்பட்டதாகவும் அவருக்கு அந்நாட்டு கொரோனா கட்டுபாட்டு விதிமீறலின் அடிப்படையில் 1000 பஹ்ரைன் தினார் அபராதத்துடன் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதே வேளை குறித்த நபர் தொற்று உறுதிபடுத்தப்பட்டதன் பிறகு, தனது முக கவசத்தை (மாஸ்க்) வேண்டுமென்றே கழற்றி விட்டு, மருத்துவ ஊழியர்களுக்கு முன் இருமியுள்ளார், பின் தன் கைகளில் மூச்சு திணறலை உள்ளிழுத்து, விரைவாக தொற்றை பரப்புவதற்காக மருத்துவர்களை தொட்டுள்ளார்.

இவரின் கொரோனா விதிமீறல் / குற்ற செயல்கள் உறுதி செய்யப்பட்டதையடுத்து குற்றவியல் நீதிமன்றில் குறித்த நபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதே வேளை, பஹ்ரைனில் இது வரை 41,536 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதுடன் 147 பேர் உயிரிழந்தும், 38,666 பேர் குணமடைந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.