கொரோனா: மோடி மற்றும் பழனிசாமி கலந்துரையாடல்

0
13

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரேனா தடுப்பு பணிகள் குறித்து, இருவரும் தொலைபேசியில் கலந்துரையாடியதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ‘இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொலைபேசி ஊடாக தொடர்பினை ஏற்படுத்தி இருந்தார்.

இதன்போது, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மற்றும் மருத்துவ சிகிச்சை விபரங்கள் தொடர்பாக இருவரும் கலந்துரையாடினர்.

மேலும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு முழுவீச்சில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் தமிழ்நாட்டில் இயல்பு நிலை திரும்ப அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது என முதல்வர் பழனிசாமி பிரதமரிடம் தெரிவித்தார்’ என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.