கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து இலுப்பையடி சந்தியில் கார் ஒன்றுடன் மோதியது..

0
31
12 / 100

யாழ்ப்பாணத்தில் கார் மீது மோதிய இலங்கை போக்குவரத்துச்சபை பேருந்து அருகிலிருந்து ஆடை விற்பனை நிலையத்தின் முகப்பு பகுதியின் மீதும் மோதியுள்ளது. யாழ்ப்பாணம் இலுப்பையடிச்சந்தியில் நேற்றிரவு 11 மணிக்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து இலுப்பையடி சந்தியில் கார் ஒன்றுடன் மோதியுள்ளது. பேருந்து காருடன் மோதியதுடன் தொலைபேசி கம்பம், மின்விளக்கு ஆகியவற்றையும் சேதப்படுத்தி, அருகில் உள்ள ஆடைகள் விற்பனை நிலையத்தின் முன்பகுதியையும் உடைத்துக்கொண்டு புகுந்தது

இதன்காரணமாக ஆடைவிற்பனை நிலையத்திற்குள் உறங்கிக்கொண்டிருந்தவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆடைகள் விற்பனை நிலையத்திற்கு அருகில் காணப்பட்ட வாகனங்கள் திருத்தும் நிலையத்திற்கும் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது,அங்கு நின்ற கார்சேதமடைந்துள்ளது.

இதேவேளை பேருந்து மோதிய காரில் பயணித்தவர்கள் வெளிமாவட்டத்தினை சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.