தற்கொலை செய்துகொண்ட கொழும்பை சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன்…

0
27
50 / 100

கொழும்பை சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் தனியார் வைத்தியசாலை ஒன்றின் 10 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது. 26 வயதான இளைஞனே இவ்வாறு தறகொலை செய்துகொண்டுள்ளார்.

10வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ள இந்த இளைஞன், 5 வது மாடியில் உள்ள பல்கனியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை. கொள்ளுப்பிட்டி பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.