கோட்டாபய அரசுக்கு எதிராக உருவெடுக்கவிருக்கும் வலுவான எதிர்க்கட்சி..?

0
50

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயல்பட முடியுமென்றால் அரசுக்கு எதிராக பாரிய இயக்கம் ஒன்றை உருவாக்க முடியும் என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக பாரிய இயக்கம் ஒன்றை உருவாக்கும் சூழ்ச்சி நடைபெறுகின்றதா என ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயல்பட முடியுமென்றால் அரசுக்கு எதிராக பாரிய சக்தி ஒன்றை உருவாக்க முடியும்.

ஏனென்றால் மக்களின் அதிருப்தியை அரசாங்கம் சந்தித்து வருகின்றது. நாமும் அவதானத்துடன் அரசின் நடவடிக்கைகளை கவனித்து வருகின்றோம்.

நாம் ஐக்கிய மக்கள் சக்தியின் பலத்தை அதிகரித்து அரசுக்கு எதிரான கட்சிகளையும் இணைத்து மக்களுக்கு எதிராக செயல்படும் அரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்குத் தயாராகி வருகின்றோம்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய எதுவித தடையும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையை சஜித் பிரேமதாசவுக்கு வழங்கி இரு தரப்பாரும் ஒன்றிணைந்து செயல்படலாம் என்றார்.