சிறப்பு விருந்தினர்கள் வருகையால் களைகட்டிய பிக்பாஸ் வீடு…. யாரெல்லாம் வந்துருக்காங்க தெரியுமா?

0
9
51 / 100

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சிறப்பு விருந்தினர்கள் வருகையால் பிக்பாஸ் வீடு களைகட்டி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கியது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசன் தற்போது இறுதி வாரத்தை எட்டியுள்ளது. ரியோ, ஆரி, பாலா, ரம்யா, சோம், கேபி ஆகிய 6 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். இந்த வார இறுதியில் யார் வெற்றியாளர் என்பது தெரியவரும். தற்போதைய சூழலில் நடிகர் ஆரி வெற்றியடைய அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று வெளியான புரோமோவில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பின்னர் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் சிறப்பு விருந்தினர்களாக ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளனர். அதன்படி அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ், ரேகா ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர். அவர்களின் திடீர் எண்ட்ரியால் இதர போட்டியாளர்கள் உற்சாகத்தில் திளைத்துப்போய் உள்ளனர்