சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு இதோ சில தீர்வுகள்

0
26

சிறுநீரகங்கள் என்பவை முதுகெலும்பிகளின் உடலின் இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் அவரை விதை வடிவில் அமைந்த உறுப்புகளாகும். இவை பின் வயிற்றுக் குழியில் அமைந்துள்ளன.

சிறுநீரகம் என்பது யூரியா போன்ற கழிவுப் பொருட்களைக் குருதியில் இருந்து பிரித்து, நீருடன் சேர்த்துச் சிறுநீராக வெளியேற்ற உதவும் ஒரு உடல் உறுப்பு ஆகும்.

ஆனால் இன்று சிறுநீரகம் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கின்றனர்.

சிறுநீரை கட்டுப்படுத்துவதாலோ அல்லது மற்ற நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் நம் உடலை விட்டு வெளியேறவில்லை என்றால் அது பலவிதமான பாதிப்புகளுக்கு உண்டாகும். உடலில் பல்வேறு பிரச்சனைகளை தோற்றுவிக்கும்.

இதனை ஆரம்பத்திலே சரி செய்வது சிறந்து. அந்தவகையில் தற்போது சிறுநீர் சார்ந்த அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் சில எளிய வைத்தியங்களை தற்போது பார்ப்போம்.

விராலி மஞ்சளின் இலைகள் 5 அல்லது 6 எடுத்து காலை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பிரச்சனைகள் குணமாகும்.
தொற்றால் கொட்டையை பொடி செய்து பசும்பாலில் கலந்து குடித்தால் சிறுநீரக சம்பந்தமான பிரச்சினையில் இருந்து சிறிது சிறிதாக விடுபடலாம்.
மெக்னீசியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிற கோதுமை, பாதாம், பீன்ஸ் போன்ற உணவுகளை அதிகம் சேர்த்துக் கொண்டால் சிறுநீர் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.
வெந்தயம் மற்றும் வெந்தயக் கீரையை தினமும் சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டு சாப்பிட்டு வருவதன் மூலமும் சிறுநீரக பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

பார்லி கஞ்சியுடன் சிறிதளவு வெண்டைக்காய் விதைகளை சேர்த்து காய்ச்சி மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.

அத்திமர வேரில் இருந்து எடுக்கப்படுகின்றன நீர் குடித்து வந்தாலும் சிறுநீர் கோளாறுகள் குணமாகும்.

திராட்சைப் பழம் அதிகமாக சாப்பிட்டு வந்தால் அதிகப்படியான கொழுப்பை குறைத்து மாரடைப்பை தடுப்பது மட்டுமின்றி சிறுநீரகத்தில் கல் வருவதையும்தடுத்து விடும்.

சிறிதளவு பாகற்காய் சாறு எடுத்து மோரில் கலந்து குடித்து வந்தாலும் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.