சுனில் நரைன் பந்து வீச்சை பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள கஷ்டப்படுவார்கள்: கவுதம் கம்பிர் சொல்கிறார்

  0
  4

  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன் பந்து வீச்சை பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள கஷ்டப்படுவார்கள் என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.

   

  ஐபிஎல் 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. ஒவ்வொரு அணிகளும் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்ல ஆர்வமாக உள்ளனர்.
  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக உள்ளார். தற்போது அவர் தனது பந்து வீச்சில் மாற்றம் செய்துள்ளார். கரீபியன் பிரிமீயர் லீக்கில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
  அதேபோல் ஐபிஎல் லீக்கில் சுனில் நரைன் பந்து வீச்சை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள் என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில் ‘‘என்னை பொறுத்த வரைக்கும் முக்கியமான விசயம் என்னவென்றால், சுனில் நரைன் பந்தை மறைத்து வைத்து பந்து வீசும்போது, அது பேட்ஸ்மேன்களுக்கு கூடுதலாக கஷ்டத்தைத கொடுக்கும்.
  அப்படி வீசும் பந்து உள்ளே வருகிறதா? அல்லது வெளியே செல்கிறதா? என்பதை பேட்ஸ்மேன்களால் கணிப்பது மிகவும் கடினமாக இருக்கும். மிகவும் தாமதமாகத்தான் அவரது கையில் பந்தை ரிலீஸ் ஆவதை பார்க்க முடியும். அதனால் பேட்ஸ்மேன்கள் கஷ்டப்படுவார்கள்.
  ஆடுகளதில் பந்து சற்று அதிகமாக க்ரீப் ஆனால், அவருக்கு மிகவும் பயனுள்ளதாக அதை மாற்றிவிடுவார். பந்தில் சற்று வேகத்தை கூட்டுவது சுனில் நரைன், ரஷித் கான் ஆகியோருக்கு சாதகமாக இருக்கும்’’ என்றார்.
  சுனில் நரைன் 2012-ல் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 110 போட்டிகளில் 122 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.