சுற்றுலாத்துறையினை மீள வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை

0
26

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாரிய பின்னடைவை சந்தித்து வரும் சுற்றுலாத்துறையினை மீள வழமைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இலங்கை மட்டுமல்லாமல் ஏனைய நாடுகளும் சர்வதேச ரீதியாக தொற்றுக்கு உள்ளான நிலையில், சுற்றுலாத்துறை மூலம் கிடைத்து வந்த அந்நிய செலாவணி பாரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் நலன் பேணும் அமைப்பும் பசிவிக் ஆசிய பயணிகள் சங்கமும் இணைந்து, “ஒரே தொழில் ஒரே குரல்” என்ற தொனிப்பொருளில் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

இந்த திட்டத்திற்கு அமைய கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டின் கீழ் வந்ததன் பின்னர் சுற்றுலா துறையினை மேம்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றன.

இது தொடர்பாக சுற்றுலா துறையின் பங்காளிகள் இணைந்து நாளை மறுதினம் இலங்கை வர்த்தக சம்மேளனத்தில் விரிவான பயிற்சி பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்வின் போது, சுற்றுலாத்துறை தரப்பினர் எதிர்நோக்கும் பல்வேறு தொழில்சார் பிரச்சனைகள் குறித்து ஆராயப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.