சுலைமானி தொடர்பான தகவலை வழங்கிய குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

0
16

ஈராக்கில் அமெரிக்க ட்ரோன் தாக்குதலால் கொல்லப்பட்ட சக்திவாய்ந்த இஸ்லாமிய புரட்சிக காவல்படை (IRGC) தளபதி குவாசிம் சுலைமானி தொடர்பில் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் தகவல் வழங்கிய குற்றவாளியொருவரை தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளதாக ஈரானின் நீதித்துறை தெரிவித்துள்ளது.

உளவு பார்த்த குற்றச்சாட்டுக்காக மஹ்மூத் முசாவி-மஜ்தின் என்ற நபருக்கே திங்கட்கிழமை காலை இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஈரானிய நீதித்துறையின் வலைத்தளம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனவரி மாதம் 03 ஆம் திகதி அதிகாலை பாக்தாத் அருகே அமெரிக்க வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட குட்ஸ் படையின் தளபதி சுலைமனி எங்கிருக்கிறார் என்பது பற்றிய தகவல்களை முசாவி-மஜ்த், ஜூன் மாதம் அனுப்பியதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முசாவி-மஜ்தின் மரண தண்டனை உச்சநீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டதாகவும், அது விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் நீதித்துறை கடந்த மாதம் கூறியிருந்தது.

இந் நிலையில் சி.ஐ.ஏ.வுக்கு தகவல்களை விற்றதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் ஊழியர் தூக்கிலிடப்பட்டதாக ஜூலை 14 அன்று ஈரானின் நீதித்துறை அறிவித்த பின்னர் இந்த அறிக்கை வந்துள்ளது.