சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை மனமுருகவைக்கும் எஸ்.பி.பி-யின் இறுதிக்கால உரையாடல் – மருத்துவர் வெளியிட்ட தகவல்…

0
17

பாடும் நிலா என ரசிகர்களால் புகழப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமண்யம் சமீபத்தில் மறைந்தார். அவரின் மறைவு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

தொடர்ந்து அவர் குறித்த தகவல்களை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பகிர்ந்து வருவதால் சமூக வலைதளங்களில் எஸ்.பி.பி-யின் பெயர் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தீபக் சுப்ரமணியன், நந்த கிஷோர் இருவரும் அவர் குறித்த புதிய தகவல்களை தற்போது பகிர்ந்து கொண்டுள்ளனர்.

அதன்படி பாடகர் எஸ்.பி.பி-க்கு கிரிக்கெட் மிகவும் பிடித்தமான விளையாட்டாம். அதேபோல ஐபிஎல் அணிகளில் சென்னை அணி அவரின் பேவரைட் அணி என மருத்துவர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.

இந்த தகவல் தற்போது கிரிக்கெட் ரசிகர்களை உணர்ச்சி வசப்பட வைத்துள்ளது. பாடகர் எஸ்.பி.பி-யின் மறைவையடுத்து சென்னை ரசிகர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுபோல சென்னை அணியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவரின் புகழ்பெற்ற பாடல் வரிகளை பகிர்ந்து இரங்கல் தெரிவித்து இருந்தது.