தந்தையை கொலைசெய்த மகன்

0
33

பள்ளம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மகன் ஒருவர் தனது தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பள்ளம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகனுக்கும், தந்தைக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த தாக்குதலில் பலத்த காயமடைந்த தந்தை சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த சம்பவத்தில் 39 வயதான தந்தை உயிரிழந்துள்ளதுடன் சந்தேக நபரான மகன் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லம பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.