தமிழரசுக் கட்சியின் அதிரடி நடவடிக்கை… மாவை வெளியிட்ட தகவல்

0
8

தேர்தல் காலங்களிலும் அதன் பின்னரும் இணையத்தளங்களிலும், ஊடகங்களிலும், கட்சிக்கும், அதன் தலைமையின் மீது பிரசாரங்களை முன்வைத்த உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று வவுனியாவில் இடம்பெற்றது.

அதன்போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய குழுக் கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோது மாவை சேனாதிராஜா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் அடுத்த மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.