தல டோனிக்கு காத்திருக்கும் முக்கிய பதவி… CSK அதிகாரி தகவல்

  0
  11

  டோனி அணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், அவர் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு பாஸ் ஆக இருப்பார் என்று அந்தணியின் தலைமை செயல் அதிகாரி கூறியுள்ளார்

  இந்திய அணிக்காக மூன்று வித கோப்பைகளை வாங்கிக் கொடுத்த டோனி, ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காகவும் கோப்பைகளை வாங்கி குவித்தவர்.

  தற்போது 39 வயதாகும் டோனி அவர் இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் ஒரு வீரராக அணியில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்றே கூறப்படுகிறது.

  ஆனாலும் இன்றுவரை சென்னை அணி கேப்டன் என்றால் டோனியை தவிர வேறு யாரையும் அந்த இடத்தில் வைத்து பார்க்க கூட விரும்பவில்லை.

  இந்நிலையில் இன்னும் 10 வருடங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டோனியின் நிலை எப்படி இருக்கும் என்பது குறித்து அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், இன்னும் 10 வருடங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டோனி தான் பாஸ் ஆக இருப்பார்.

  இதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் அப்படி ஒரு தொடர்பு இருக்கிறது.

  அணி வீரர்களிடம் எப்படி சிறப்பான ஆட்டத்தை வாங்குவது என்பதை அவர் அறிந்தவர். அதேபோல் அடுத்த தலைமுறை வீரர்களை எப்படி அணிக்கும் கொண்டு வருவதே என்பதையும் அவர் அறிந்தவர் இதனால் அவர் எப்போதும் அணியில் இருப்பார் என்று தெரிவித்துள்ளார்