தல டோனி போன்று ஹெலிகொப்டர் ஷாட்… கடுமையாக பயிற்சி செய்யும் வீரர்

  0
  10

  இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பாண்ட் டோனியைப் போன்று சிக்ஸர் அடிப்பதற்கு பயிற்சி மேற்கொண்டு வரும் வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

  இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவரான டோனி, ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பதில் வல்லவர், அவர் வந்த பின்னர் தான் ஹெலிகாப்டர் என்பது மிகவும் பேசப்பட்டது.

  ஆனால் சமீபகாலமாக எந்த ஒரு போட்டியிலும், டோனியின் பழைய ஹெலிகாப்டர் ஷாட்களை பார்க்க முடியவில்லை. டோனியின் பேட்டிங் சொல்லப் போனால், முற்றிலும் மாறி போயுள்ளது என்று கூறலாம்.

  இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் விரைவில் ஐபிஎல் தொடர் துவங்கவுள்ளதால், இதற்காக வீரர்கள் கிடைக்கும் நேரத்தில் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

  அந்த வகையில், தற்போது அவர் டோனியைப் போன்று ஹெலிகாப்டர் ஷாட்டுகளை அடிக்கும் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். அந்த அதில் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.