தினமும் 2 செம்பருத்தி பூவை சாப்பிட்டு வாருங்கள்…

0
29

செம்பருத்தியில் ஏராளமான நிறங்கள், ஒற்றை மற்றும் அடுக்கு செம்பருத்தி என பல வகைகள் உள்ளன.

இதனை கிராமத்து ரோஜா என்று அழைக்கப்படுகின்றது. நறுமணம் கொண்ட இவை கண்களுக்கு விருந்தாக மட்டுமல்ல.. மருந்தாகவும் பயன்படுகின்றன.

செம்பருத்தி பூவில் ஆன்டி ஆக்ஸிடன்கள், ஆந்தோசயனின் மற்றும் ப்ளோவனாய்டுகள் போன்றவைகள் காணப்படுகின்றன.

இதனை டீயாக கூட நீங்கள் டீயாக கூட எடுத்து வரலாம். பல நன்மைகள் இருக்கும்.

அந்தவகையில் தற்போது செம்பருத்தியினை எடுத்து கொள்வதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

செம்பருத்தி பூ டீயை தொடர்ந்து 12 நாட்கள் குடித்து வந்தால் சிஸ்டோலிக் இரத்த அழுத்தமானது 11.2% வரை குறைகிறது. டயஸ்டோலிக் இரத்த அழுத்தமானது 10.7% வரை குறைகிறது. உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் செம்பருத்தி டீயை குடித்து வரலாம்.

உயர் இரத்த சர்க்கரை உங்கள் நரம்புகள், கண்கள் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. மேலும், இது இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. எனவே செம்பருத்தி சாற்றை 21 நாட்கள் குடித்து வர இரத்த சர்க்கரை அளவு குறைகிறது.

செம்பருத்தி பூவின் சாற்றை பிழிந்து வாய்வழியாக எடுத்துக் கொண்டு வரும் போது இரத்த கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. இது கொலஸ்ட்ரால் அளவை 22% வரை குறைக்கிறது.

செம்பருத்தி பூ இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பேஸ்ட்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கிறது. இது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை தூண்டுகிறது. முடியை பலப்படுத்துகிறது. எனவே செம்பருத்தி பூவைக் கொண்டு சாம்பு தயாரிப்பது உங்க கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்த ஒன்றாக அமையும்.

செம்பருத்தி பூ மனித செல்களில் உள்ள டி செல்கள் பி செல்களை தூண்டி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எனவே தினமு‌ம் 1கப் செம்பருத்தி டீ குடிப்பது உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

செம்பருத்தி பூ சாற்றை பருகி வரும்போது சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பை பெற முடியும். இது சரும செல்கள் பாதிப்படைவதை தடுக்கிறது. எனவே செம்பருத்தி பூவை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டு பலன் அடைவோம்.