தியாகி திலீபனின் நினைவேந்தலின் தடையை கண்டித்து நாளை வடக்கு – கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால்

0
5

தியாகி திலீபனின் நினைவேந்தலின் தடையை கண்டித்து நாளை வடக்கு – கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் போராட்டத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை அரசாங்கம் தடுத்தமைக்கு எதிராக நாளை வடக்கு – கிழக்கு தழுவிய போராட்டத்துக்கு தமிழ் தேசியக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

குறித்த வடக்கு கிழக்கு தழுவிய பூரண செயற்பாட்டு முடக்கத்திற்கு யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவை வழங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.