திருமணமான 5வது நாளில் கனடாவில் விபத்தில் உயிரிழந்த கிளிநொச்சி இளைஞன்!

0
14

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு ஈழத்தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஒன்ராரியோவில் புளுமவூன்டன்- Grey Road 19 Near Craigmore Crescent- பகுதியில் நேற்று முன்தினம் (03) இரவு 11 மணியளவில் கார் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இருவரும் உயிரிந்தனர்.

ஒஷாவா, விட்சர்ச்-ஸ்டாஃப்வில்லியைச் சேர்ந்தவர்களே உயிரிழந்தனர். இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இன்னொருவர் படுகாயமடைந்த நிலையில், டொரோண்டோ மருத்துவமனைக்கு மருத்துவ உலங்குவானூர்தியில் எடுத்துச்செல்லப்பட்டார்.

உயிரிழந்தவர்களில் ஒருவரான தனபாலசிங்கம் கஜன் (29) கடந்த சனிக்கிழமை திருமணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி பளை பகுதியை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.