தீப்பிடித்து எரியும் கப்பலால் பெரும் ஆபத்தை எதிர்கொள்ளவேண்டிய நிலையில் வடக்கு கிழக்கு

0
42

ஸ்ரீலங்காவின் கிழக்கு கடற்பரப்பில் எரிபொருளுடன் கப்பல் தீப்பற்றி எரிவதன் காரணமாக வடக்கு கிழக்கு மற்றும் தென்பகுதி கடற்பரப்பில் மோசமான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என கடலோர சூழல் பாதுகாப்பு அதிகார சபை எச்சரித்துள்ளது.

எனவே ஏற்படக்கூடிய பாரிய சூழல் பேரழிவை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் ஸ்ரீலங்கா கடற்படை விமானப்படையுடன் ரஸ்ய மற்றும் இந்திய கப்பல்கள் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கப்பலின் அனைத்து பகுதிகளுக்கும் தீ பரவியுள்ளதாகவும் இதன் காரணமாக சூழல் பாதிப்பு ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கப்பலில் தீப்பிடித்துள்ளதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கடலோர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட கப்பலில் 1700 தொன் டீசல் உள்ளது என தெரிவித்துள்ள அதிகாரியொருவர் இந்த எரிபொருள் கசியக்கூடும் என தெரிவித்துள்ளார்.