தேங்காய்களுக்கு தட்டுப்பாடு தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு

0
6

இந்த வருடத்தில் 250 மில்லியன் தேங்காய்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

தேங்காய் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகார சபையின் அபிவிருத்தி பணிப்பாளர் P. எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

வருடாந்தம் 3,000 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்யப்படும் நிலையில் இந்த தடவை இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சீரற்ற வானிலையினால் தெங்கு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அபிவிருத்தி நடவடிக்கைகளினால் தெங்கு செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் அபிவிருத்திப் பணிப்பாளர் P. எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் தட்டுப்பாடு தொடர்பில் முறையாக மதிப்பீடு செய்து, அறுவடையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.