தேர்தல் முடிவுகள் தொடர்பில் வெளிவந்த முக்கிய தகவல்

0
1230

இன்று நடைபெற்று முடிந்த ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலின் முதலாவது முடிவு நாளை வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு வெளியாகும்

இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பான அனைத்து முடிவுகளும் ஓகஸ்ட் 7 ஆம் திகதி முழுமையாக வெளிவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய வாக்குப்பதிவு மாலை ஐந்து மணிக்கு நிறைவுக்கு வந்தது.இதனையடுத்து வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.

இந்த நிலையில் நாளை காலை 7 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் பிற்பகல் 2.30 மணிக்கு முதலாவது முடிவு வெளியிடப்படும் எனவும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.