தொடர்ந்தும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில்

0
8

ஐக்கியதேசிய கட்சியின் தலைவராக 2021 ஜனவரி வரை ரணில் விக்கிரமசிங்க நீடிப்பார் என கட்சி நேற்று அறிவித்துள்ளது.

கட்சியை மீள அமைக்கும் நடவடிக்கைகள் அடுத்த சிலவாரங்களில் இடம்பெறும் ஜனவரி 21 ம் திகதி வரை ரணில்விக்கிரமசிங்க தலைவராக நீடிப்பார் என ஐக்கியதேசிய கட்சி அறிவித்துள்ளது.

ஐக்கியதேசிய கட்சியின் செயற்குழுவின்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவராக ருவான் விஜயவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரதி தலைவர் பதவிக்காக ரவி கருணாநாயக்க,ருவான் விஜயவர்தன,முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக 28 வாக்குகளுடன் ருவான் விஜேவர்த்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.