தோனி பட நடிகைக்கு கொலை மிரட்டல்…. பாலிவுட்டில் பரபரப்பு

0
7
50 / 100

பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம், இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல இளம் இந்தி நடிகை திஷா பதானி. இவர் 2015-ல் வருண் தேஜா ஜோடியாக லோபர் தெலுங்கு படத்தில் அறிமுகமானார். கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி படம் மூலம் இந்திக்கு போனார்.
தொடர்ந்து அவர் நடித்த குங்பூ யோகா படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. பாகி 2, பாரத் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் விரைவில் திரைக்கு வர தயாராகும் ராதே படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடித்து இருக்கிறார்.
இந்நிலையில், நடிகை திஷா பதானிக்கு போனில் மர்ம அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் திஷா பதானியை கொலை செய்யப் போவதாக மிரட்டி உள்ளார். இதுபோல் போலீஸ் நிலையத்துக்கும் திஷா பதானியை கொலை செய்ய இருப்பதாக மிரட்டல் போன் வந்து இருப்பதாக கூறப்படுகிறது.
போன் நம்பரை வைத்து விசாரித்தபோது அந்த அழைப்பு பாகிஸ்தானில் இருந்து வந்து இருப்பதாக கூறப்படுகிறது. இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.