நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் மகளுக்கும் கொரோனா தொற்று

0
53

உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரின் மகள் ஆரத்யாவும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

நேற்றையதினம் ஐஸ்வர்யாராயின் மாமனார் அமிதாப் மற்றும் கணவன் அபிஷேக் ஆகியோர் கொவிட் -19 க்கு சாதகமாக சோதனை செய்யப்பட்டனர். வைரஸ் பாதிப்புக்குள்ளான அவர்கள் தற்போது மும்பையின் நானாவதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமிதாப், அபிஷேக் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்த பின்னர் அவர்கள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனையில் ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அவரின் மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

ஐஸ்வர்யா ராய்க்கும், ஆரத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது குறித்து அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆரத்யா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை மாலை, ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மாமியார் ஜெயா பச்சன் இருவரும் கொரோனா தொற்று சோதனைக்கு உட்படுத்தப்படடனர். அதில் அவர்கள் கொரோனா வைரஸுக்கு எதிர்மறையாக அறிவிக்கப்பட்டனர்.

எனினும் இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளிலேயே ஐஸ்வர்யா ராயும், அவரது மகளும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.