நடிகை தமன்னா, விராட் கோலியை கைது செய்யக்கோரி சென்னை நீதிமன்றத்தில் வழக்கு

  0
  16

  இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட்கோலி, இந்திய தமிழ் நடிகை தமன்னா ஆகியோரைக் கைது செய்யுமாறு சென்னையை சேர்ந்த வழக்கறிஞரால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

  இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, நடிகை தமன்னா ஆகியோர் இணைய சூதாட்ட விளம்பரங்களில் நடித்துள்ள நிலையில், இணைய சூதாட்டத்துக்குத் தடை விதிக்க கோரி சென்னை வழக்கறிஞர் சூரியபிரகாசம், தாக்கல் செய்துள்ள மனுவில் இவர்கள் இருவரின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  இந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 4 ஆம் திகதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரனைக்கு எடுத்துகொள்ளப்பட உள்ளது.

  குறித்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

  இணைய சூதாட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும். இது கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மற்றும் நடிகை தமன்னா உள்ளிட்ட பிரபலமான கிரிக்கெட் மற்றும் திரைப்பட பிரமுகர்களைப் பயன்படுத்துகிறது. இதன் காரணமாக இந்த விளையாட்டில் சேர வேண்டுகோளுடன் இளைஞர்களை மூளைச் சலவை செய்கின்றனர்.

  இந்த சூதாட்ட சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது மற்றும் இந்திய அரசியலமைப்பின் 21 ஆவது பிரிவை மீறுவதாகும், ஏனெனில் இது வாழ்க்கை உரிமையை மீறுகிறது. எனவே தடைசெய்யுமாறு கோரியும் அத்தகைய வலைத்தளங்கள் மற்றும் மொபைல் பயன்பாடுகளை இயக்கும் அனைவரையும் கைதுசெய்து வழக்குத் தொடரவும் கோரி இந்த ரிட் மனு, தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  இதனையடுத்து இணைய சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களில் நடித்தமைக்காக கோலி, தமன்னா போன்றோர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்படுகின்றது.