நாடாளுமன்ற உறுப்பினர் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்..

0
18

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு வழங்கப்பட்டிருந்த அரச விடுதியை பார்வையிடுவதற்காக அங்கு சென்றிருந்தவேளை, வெளியே பூட்டப்பட்டிருந்த விடுதியின் உள்ளே சிவசக்தி ஆனந்தன் சிலருடன் கலந்துரையாடல் ஈடுபட்டுள்ளதை அவதானித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு வழங்கப்பட்டிருந்த விடுதி பூட்டப்பட்டு அதன் சாவி அரசாங்க அதிபரிடம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அந்த சாவியினை அரச அதிபரிடம் இருந்து பெற்றுக்கொண்டு விடுதியை பார்வையிடுவதற்காக அங்கு நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் சென்றிருந்த வேளையில் அங்கு ஏற்கனவே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சிலருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருப்பதை அவதானித்திருக்கின்றார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் ,

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நீண்டகாலமாக அரச விடுதியைப் பெற்றுக்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகமாகவும் மக்கள் சந்திப்புக்களையும் அங்கு கடந்த காலங்களில் மேற்கொண்டு வந்துள்ளார்.

எனினும் அண்மையில் இடம்பெற்ற தேர்தலின்போது மாவட்ட செயலகத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக அரச விடுதி பூட்டப்பட்டு சாவி அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து வன்னி மாவட்டத்திற்கு புதிதாக தெரிவாகிய நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான குலசிங்கம் திலீபன் மாவட்ட அரசாங்க அதிபரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அரச விடுதியின் சாவியை இன்று காலை பெற்றுக்கொண்டு விடுதியைப் பார்வையிடுவதற்காக அவரது கட்சி ஆதரவாளர்களுடன் உள்ளே சென்றபோது பூட்டப்பட்டிருந்த அரச விடுதியினுள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தனது ஆதரவாளர்களுடன் கலந்துரையாடலை முன்னெடுத்து வந்துள்ளார்.

இதையடுத்து அதிர்ச்சியடைந்த புதிய நாடாளுமன்ற உறுப்பினரை அழைத்துச் சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமரசத்தில் ஈடுபடுபட்டிருந்ததாக தெரியவருகின்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் வீடு விடுதிக்கு பின்புறமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.