நாடுமுழுவதும் இதுவரை 70 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவு

0
7

நாட்டின் 9 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது.

இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வரும் நிலையில், காலை 7 மணி முதல் 10 மணி வரையிலான காலப்பகுதியில், நாடளாவிய ரீதியில் 70 தேர்தல் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

இவற்றுள் சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம் தொடர்பில் 52 முறைபாடுகளும், சட்டவிரோத சுவரொட்டிகள் மற்றும் கட்டவுட்கள் தொடர்பில் 07 முறைபாடுகளும் தேர்தல் மிரட்டல் குறித்து 05 முறைபாடுகளும் பதிவாகியுள்ளதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த சம்பவங்களில், தேர்தல் சட்ட மீறல் தொடர்பில் கேகாலை மாவட்டத்தில் 15 சம்பவங்களும், காலி மாவட்டத்தில் 10 சம்பவங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 05 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இதேவேளை இதுவரை சட்டவிரோத பிரச்சாரம் தொடர்பாக 52 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

குறித்த சம்பவங்களில் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களுடன் தொடர்புடைய 39 தேர்தல் வன்முறை சம்பவங்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களுடன் தொடர்புடைய 11 தேர்தல் வன்முறை சம்பவங்களும், ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களுடன் தொடர்புடைய 4 தேர்தல் வன்முறை சம்பவங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.