நாடு முழுவதும் சீரற்ற காலநிலை… 10 மாவட்டங்கள் பாதிப்பு

0
21

நாடு முழுவதும் தொடரும் சீரற்ற காலநிலைக் காரணமாக பத்து மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் வீசிய பலத்த காற்று காரணமாக 483 வீடுகள் சேதமடைந்துள்ளதா அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி குறிப்பிட்டுள்ளார்.

குருணாகல், இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கேகாலை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களே இவ்வாறு அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளது.

இதேவேளை சீரற்ற காலநிலையால் உண்டான அனர்த்தம் காரணமாக ஐவர் காயமடைந்தும் உள்ளனர்.

இதற்கிடையில், நாட்டின் பல மாவட்டங்களுக்கான மின்சார விநியோக நடவடிக்கையானது தடைசெய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.