நாடு முழுவதும் லொக்டவுன் செய்ய எந்த அவசியமும் இல்லை..! இராணுவ தளபதி தகவல்

0
504

மினுவாங்கொட பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு எவ்வாறு கொரோனா தொற்றியதென ஆராயப்பட்டு வருவதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி நாட்டை லொக்டவுன் செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மினுவாங்கொட தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கடந்த 21ஆம் திகதி முதல் ஒரு வகையான காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார். எனவே நோயின் ஆரம்பம் தொடர்பில் கண்டுபிடிப்பது கடினமாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரென்டிக்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.