நார்ச்சத்து நிறைந்த பேபிகார்ன் சாலட்

0
10
11 / 100

சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதால் நார்ச்சத்து நமக்கு முழுமையாக கிடைக்கின்றது. சோளத்தில் இருக்கும் இந்த நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

தேவையான பொருட்கள்

பொடியாக அரிந்த பேபிகார்ன் – கால் கப்

பொட்டுக்கடலை – 3 டீஸ்பூன்
ஊறவைத்த நிலக்கடலை – 25 கிராம்
சீரகத் தூள் – கால் டீஸ்பூன்
ஆம்சூர் பொடி – தேவையான அளவு
தனியா பவுடர் – கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 1
பூண்டுப் பற்கள் – 3
உப்பு – தேவையான அளவு

செய்முறை

காய்ந்த மிளகாய், பூண்டு, உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் பொடித்துக்கொள்ளுங்கள்.

பொடியாக நறுக்கிய பேபி கார்னுடன் பொட்டுக்கடலை, ஊறவைத்த நிலக்கடலை, சீரகத் தூள், ஆம்சூர் பொடி, தனியாத் தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள்.

அரைத்த காய்ந்த மிளகாய், பூண்டு, உப்பு கலவையை பேபிகார்ன் கலவையுடன் கலந்து மாலை நேரச் சிற்றுண்டியாகச் சாப்பிடலாம்.