நாளை நடைபெறவிருக்கும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் வெளியிட்ட தகவல்

0
70

2020ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை திட்டமிட்டபடி நாளை(11) நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

புலமைப்பரிசில் தேர்வுக்கு இம்முறை 331,694 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், சிங்கள ஊடகத்தில் 248,072 மாணவர்களும், தமிழ் ஊடகத்தில் 83,622 மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

5ம் வகுப்பு மாணவர்களுக்கான ஒரு அரிய சந்தர்ப்பம்!

  • இன்றே உங்கள் பரீட்சையை எழுதிப் பார்க்கலாம்                                                   
  • மாவட்ட ரீதியில் நீங்கள் எத்தனையாவது இடம் என்பதை அறியலாம்         
  • நாடு தழுவிய ரீதியில் நீங்கள் எத்தனையாவது இடம் என்பதை அறியலாம்
  • நீங்கள் எத்தனை சரி எடுத்தீர்கள், எத்தனை பிழை எடுத்தீர்கள் என்பதை உடனே பார்த்துவிட முடியும். www.o2o.lk

கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களுக்கு – தேர்வுக்கு தேவையான சகல வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களுக்கமைய பரீட்சையை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்ட மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு செல்வதற்கு விசேட போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட்டுள்ளதென தெரிவித்துள்ளார்.