நீ எவ்வளவு பெரிய ஆளா வேணா இரு… ராயுடுவையும் தூக்க பிளான் பண்ணீட்டாங்க போல..?

0
11

சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடுவை இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் விமர்சனம் செய்துள்ளார்.

நேற்று பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே படுதோல்வி அடைந்தது. நேற்று நடந்த போட்டியில் பெங்களூரின் பேட்டிங் தொடக்கத்தில் கொஞ்சம் மோசமாக இருந்தது. ஆனாலும் போக போக ஆட்டத்தை பெங்களூர் கட்டுக்குள் வந்தது.

நேற்று முதலில் ஆடிய பெங்களூர் 20 ஓவரில் 169 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய சென்னை வெறும் 132 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

நேற்று சிஎஸ்கே தோல்விக்கு அம்பதி ராயுடு மிகவும் பொறுமையாக ஆடியதும் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.அம்பதி ராயுடு, என் ஜெகதீசன் ஆடிய விதம் பெரிய அளவில் கேள்விகளை எழுப்பியது. பவுண்டரி எல்லைக்கு அருகில் அடித்துவிட்டு இவர்கள் சிங்கிள் ஓடியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இரண்டு ரன்கள் ஓட வாய்ப்பு இருந்தும் இவர்கள் களத்தில் ஜாகிங் செய்தனர். அதிலும் 10 ஓவர்களுக்கு பின் இரண்டு ரன்கள் ஓட வாய்ப்பு இருந்தும் கூட ராயுடு மிக மோசமாக சிங்கிள் மட்டுமே எடுத்தார். ரன் ஓடுவதற்கு விருப்பமே இன்று அம்பதி ராயுடு ரன் ஓடினார். சிஎஸ்கே தோல்விக்கு அம்பதி ராயுடுவின் இந்த செயல் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

நேற்று 4வது ஓவரில் பேட்டிங் செய்ய வந்த அம்பதி ராயுடு 18வது ஓவரில்தான் அவுட் ஆனார். ஆனால் இவ்வளவு நேரம் பேட்டிங் செய்தும் கூட வெறும் 42 ரன்களை மட்டுமே அம்பதி ராயுடு எடுத்தார். 40 பந்துகளில் இவர் 42 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் ராயுடுவின் பேட்டிங் பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

இந்த நிலையில் அம்பதி ராயுடு ஆட்டத்தை கெவின் பீட்டர்சன் விமர்சனம் செய்துள்ளார். கெவின் பீட்டர்சன் தனது பேச்சில், ராயுடு ரன் எடுப்பதற்கு நேற்று கொஞ்சம் கூட முயலவில்லை. நேற்று சிஎஸ்கே பேட்டிங்கின் 8வது ஓவரில் என் ஜெகதீசன் இரண்டு ரன்கள் ஓடும்படி கூப்பிட்டும் கூட அம்பதி ராயுடு வரவில்லை. அதிலும் என் ஜெகதீசன் ஒரு ரன் ஓடி முடித்த பின்புதான் அம்பதி ராயுடு பாதி பிட்ச் தாண்டி இருந்தார்.

அவரின் இந்த ஓட்டத்தை கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாது. மைதானத்தில் அவர் ஜாகிங் செய்கிறார். அம்பதி ராயுடு கொஞ்சம் விழித்துக்கொள்ள வேண்டும். உலகின் சிறந்த வீரர்கள் எல்லாம் ஐபிஎல்லில் விளையாடுகிறார்கள். அவர்கள் மிக வேகமாக ஓடுகிறார்கள். உயிரை கொடுத்து ஓடுகிறார்கள்.

ஆனால் நீங்கள் இவ்வளவு பெரிய இலக்கை டார்கெட்டாக வைத்துக்கொண்டு இப்படி ஓடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் எவ்வளவு பெரிய ஸ்டாராக வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் கவலை இல்லை. மற்ற வீரர்களை பார்த்து நீங்கள் எப்போதும் கற்றுக்கொள்ள வேண்டும். எப்போதும் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

கோலி நேற்று போட்டியில் எவ்வளவு வேகமாக ஓடினார் என்பதை அம்பதி ராயுடு பார்க்கக் வேண்டும். அவர் எவ்வளவு உயிரை கொடுத்து ஓடினார். ஹைதராபாத் போட்டியில் பிரைஸ்டோ எப்படி ஓடினார் என்பதை பார்த்து இருப்பீர்கள். அப்படி இருக்கும் போது அம்பதி ராயுடு இப்படி மெதுவாக மைதானத்தில் நடப்பதை பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது என்று கெவின் பீட்டர்சன் குறிப்பிட்டுள்ளார்.