பப்ஜி தடை செய்யப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்டது இந்திய அரசு

  0
  32

  இந்தியாவில், லடாக் எல்லைப்பகுதியில் நடைபெற்ற இந்திய, சீன வீரர்களுக்கு இடையேயான மோதலுக்குப் பிறகு, சீன நிறுவனங்களின் டிக்டாக், யூசி ப்ரவுசர், ஹலோ, ஷேரிட் உள்ளிட்ட 59 செயலிகளை ஏற்கனவே தடை செய்திருந்தது.

  இந்நிலையில், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள பப்ஜி மொபைல் கேம், கட் கட், பைடு, ரைஸ் ஆப் கிங்டம்ஸ் ,கேரம் ஃப்ரண்ட்ஸ் உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

  நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், பொது ஒழுங்கை கருத்தில் கொண்டும் இந்த தடை உத்தரவு பிறபிக்கப்படுவதாக மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  பப்ஜி விளையாடுவதால் இளைஞர்கள் மனஅழுத்தத்துக்கு ஆளாகி வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும், இதுபோன்ற செயலிகள் நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன என்பதும் தெரிய வந்தது.

  இதனையடுத்து பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படுகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.