பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்று வௌியீடு

0
6

2019 கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையின் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (26) வௌியிடப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ugc.ac.lk எனும் இணையத்தளத்திற்கு பிரவேசித்து வெட்டுப்புள்ளிகளை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடவை பல்கலைக்கழகங்களுக்கு 41,500 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை புதிதாக 10000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு கற்கை நெறிகளுக்காக இம்முறை இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2019 கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களில் இடம்பெற்றது.