பழிவாங்குவதில் மிகவும் உக்கிரமான ராசிக்காரங்க இவங்கதான்… கண்டிப்பா அது எந்த ராசிக்காரங்க எண்டு தெரிஞ்சு வைச்சுக்கோங்க

0
211

பசி, தூக்கம், சோகம், மகிழ்ச்சி போன்று பழிவாங்கும் உணர்வும் அனைவருக்கும் பொதுவான ஒரு உணர்வாகும்.

இந்த பழிவாங்குதல் என்பது அவரவர் சூழ்நிலையை பொறுத்து நல்லதாகவும், கெட்டதாகவும் அமையும். ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பழிவாங்கும் முறை இருக்கும்.

இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் எப்படி பழிவாங்குவார்கள் என்பதை பார்க்கலாம் .

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் உடனடி பழிவாங்குபவர்களாய் இருப்பார்கள். நீங்கல் மேஷ ராசிக்காரர்களுடன் மோதினால் அதன் விளைவுகள் உடனடியாய் உங்களை பாதிக்கும். இவர்கள் பழிவாங்க முடிவெடுத்துவிட்டால் எங்கு இருக்கிறோம், யாருடன் இருக்கிறோம் என்றெல்லாம் யோசிக்கமாட்டார்கள் உடனடியாக எதிர்வினை ஆற்றிவிடுவார்கள். பொறுமையாக யோசித்து எதிர்வினை ஆற்றுவதில் அவர்களுக்கு நம்பிக்கை இருக்காது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் திட்டமிட்டு பழிவாங்க கூடியவர்கள். தாங்கள் விரும்புபவர்கள் மீது அதிக அக்கறை செலுத்தக்கூடியவர்கள். ஆனால் அவர்களை ஒருவேளை காயப்படுத்திவிட்டால் அவர்கள் அதனை மன்னிக்கவே மாட்டார்கள், என்றைக்காவது ஒருநாள் நிச்சயம் பழிவாங்கி விடுவார்கள். சரியான நேரத்திற்காக காத்திருந்து அவர்கள் பழிவாங்கும்போது அதன் பாதிப்பு பெருமளவில் இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் நீங்கள் ஆச்சரியப்படும் விதத்தில் பழிவாங்குவார்கள். நகைச்சுவை உணர்வுமிக்க மிதுன ராசிக்காரர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு கலவையான உணர்வுகளை ஏற்படுத்தும். காயப்படும்போதோ அல்லது தீங்கு நேரும்போதோ அவர்கள் பொறுமையாக இருப்பார்கள். இதனை கண்டு ஏமாந்து விடக்கூடாது. அவர்கள் மிகப்பெரிய அளவில் பழிவாங்க காத்திருப்பார்கள். உங்களுடன் பழகி உங்களைப்பற்றி அதிகம் தெரிந்து கொள்வார்கள், சரியான சமயத்தில் அதனை பயன்படுத்தி உங்களை பழிவாங்குவார்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் மிகவும் கொடூரமாக பழிவாங்கக்கூடியவர்கள். சந்திரன் ஆட்சி செய்வதால் இவர்களின் மனநிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். அவர்களின் அன்பு, அக்கறை பாசம் எல்லாம் ஒரே இரவில் கொலைவெறியாக மாறக்கூடும். இவர்கள் பழிவாங்கும்போது அதில் எந்தவித விவேகமும் இருக்காது. மிகவும் இரக்கமற்ற முறையில் பழிவாங்க கூடியவர்கள். உங்களை எவ்வளவு காயப்படுத்த முடியுமோ அவ்வளவு காயப்படுத்துவார்கள். அதில் அவர்களுக்கு எந்தவித வருத்தமும் இருக்காது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சுனாமி போல பழிவாங்க கூடியவர்கள். பொறுமையான சிம்ம ராசிக்காரர்கள் அந்த இடத்திலேயே அப்பொழுதே பழிவாங்குவார்கள். இவர்களின் கோபம் சுனாமி போன்றது. சுனாமி எப்பொழுதாவதுதான் வரும் ஆனால் எ வரும்போது தனது பாதையில் உள்ள அனைத்தையும் அழித்துவிடும். அதுபோலத்தான் இவர்களும். பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் மன்னிப்பு கிடைக்கலாம் என்று காத்திருக்கலாம் ஆனால் அது அவர்களை மட்டுமே முடிவு செய்ய இயலும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரையில் ” பழிவாங்குவது ஒரு உணவு, அதனை மெதுவாக பரிமாற வேண்டும் ” என்ற எண்ணம் உடையவர்கள். உடனடியாக பழிவாங்கவிட்டாலும் பாதிப்பை ஏற்படுத்தியவர்களுக்கு நிச்சயம் தண்டனையை வழங்குவார்கள். இவர்கள் மறந்துவிட்டார்கள், மன்னித்துவிட்டார்கள் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் அவர்கள் அதனை செய்யமாட்டார்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் நேர்மையாக பழிவாங்க கூடியவர்கள். இவர்கள் எளிதில் கோபப்பட மாட்டார்கள். அவர்கள் வாழ்வில் மறக்கமுடியாத அளவிற்கு பழிவாங்க கூடியவர்கள். நீதிதேவன் போல இவர்கள் எப்பொழுதும் சமநிலையுடன் இருப்பார்கள், அதற்கு பாதிப்பு ஏற்படும்போது அவர்கள் அதனை ஏற்கமாட்டார்கள். அவர்கள் பழிவாங்கியது நியாயம்தான் என நீங்களே கூறும் அளவிற்கு பழிவாங்குவார்கள். அவர்கள் அடைந்த காயங்களையும், அவமானங்களையும் மறக்கமாட்டார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் துன்புறுத்தும்படி பழிவாங்க கூடியவர்கள். விருச்சிக ராசிக்காரர்களுடன் நீங்கள் மோதிவிட்டீர்களா அப்படியென்றால் நீங்கள் நிச்சயம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இவர்கள் வன்முறையில் அதிக ஈடுபாடு உள்ளவர்கள், அவர்களுடன் மோதும்போது உங்களை உடல்ரீதியாக மிகவும் துன்புறுத்துவார்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தீவிரமாக பழிவாங்கமாட்டார்கள். எனவே நீங்கள் அவர்களை காயப்படுத்தினாலோ, வருத்தமுற செய்தாலோ அவர்கள் உங்களை எளிதில் மன்னிக்க வாய்ப்புள்ளது. ஆனால் நீங்கள் எல்லைமீறி காயப்படுத்தினால் அதற்கு உடனடி எதிர்வினை ஆற்றுவார்கள். இந்த எதிர்பாராத எதிர்வினை உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும்.

மகரம்
விடா முயற்சியுடைய மகர ராசிக்காரர்கள் பழிவாங்க தனித்துவமான முறைகளை பின்பற்றுவார்கள். அவர்கள் திட்டத்தை அமல்படுத்தும்போது அது அவர்களின் கோபத்தின் வெளிப்பாடாக இருக்கும், இது அவர்களின் இறுதி அடியாக இருக்கும். அவர்களை காயப்படுத்தினால் அதற்கு நீங்கள் மிகப்பெரிய விலையை கொடுக்கவேண்டியிருக்கும். அவர்கள் முழுமையாக பழிவாங்கியவுடன்தான் உங்களை மன்னிப்பார்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் நிதானமாக பழிவாங்க நினைப்பவர்கள். அவர்கள் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டாலும் நிதானமாக இருப்பார்கள். ஆனால் அது பாதிப்பு குறைவாக இருக்கும்போது மட்டும்தான். அளவிற்கு மீறி தொல்லை தரும்போது அவர்கள் வாழ்வில் இருந்து உங்களை நிரந்தரமாக தூக்கி எறிந்துவிடுவார்கள். இதனால் நீங்கள் இலக்கப்போவது ஒரு நேர்மையான உறவை என்பதை மறந்துவிடாதீர்கள்.

மீனம்
அமைதியான மீன ராசிக்காரர்கள் அவர்களுக்கு பிரச்சினை என்று ஒன்று வரும்போது மிகவும் மூர்க்கமாக மாறிவிடுவார்கள். இவர்கள் மற்ற ராசிகளை விட அதிக உணர்ச்சிவச படக்கூடியவர்கள், அதனால் இவர்கள் காயப்படுத்துவது மிகவும் எளிது. ஆனால் அதற்கு உடனடியாக எதிர்வினை ஆற்றிவிடுவார்கள்.