பவர் பிளேயில் ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு விக்கெட் இழப்பிற்கு 54 ரன்

0
3


தீபக் சாஹர் ஜெய்ஸ்வாலை 6 ரன்னில் வீழ்த்த சஞ்சு சாம்சன் அதிரடி காட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் 2020 சீசனின் 4-வது ஆட்டம் ஷார்ஜாவில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் 7 மணிக்கு சுண்டப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். டோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியில் அம்பதி ராயுடுவுக்குப் பதிலாக ருத்து கெய்க்வார்டு சேர்க்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜெய்ஸ்வால் உடன் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஜோடியாக களம் இறங்கினார். இளம் வீரரான ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி முயற்சி செய்தார். ஆனால் 3-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி, 2-வது பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் 11 ரன்கள் எடுத்திருந்தது.

2-வது விக்கெட்டுக்கு ஸ்டீவ் ஸ்மித் உடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். சஞ்சு சாம்சன் களம் இறங்கியதும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்கோர் வேகமெடுக்க ஆரம்பித்தது. சாம் கர்ரன் வீசிய 5-வது ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசினார் சஞ்சு சாம்சன்.

தீபக் சாஹர் வீசிய 6-வது ஓவரில் சஞ்சு சாம்சன் ஒரு சிக்சரும், ஸ்மித் ஒரு பவுண்டரியும் விளாசினார். ராஜஸ்தான் ராய்ல்ஸ் பவர் பிளேயான முதல் 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 23 ரன்களுடனும், சஞ்சு சாம்சன் 24 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

சென்னை அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. வாட்சன், 2. முரளி விஜய், 3. டு பிளிஸ்சிஸ் 4. கேதர் ஜாதவ், 5. எம்எஸ் டோனி, 6. ஜடேஜா, 7. சாம் கர்ரன், 8. பியூஷ் சாவ்லா, 9. தீபக் சாஹர், 10. லுங்கி நிகிடி. 11. ருத்து கெய்க்வார்டு.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ஸ்மித், 2. டேவிட் மில்லர், 3. ஜாஃப்ரா ஆர்சர், 4. டாம் கர்ரன், 5. ராபின் உத்தப்பா, 6. சஞ்சு சாம்சன், 7. ஷ்ரேயாஸ் கோபால், 8. உனத்கட், 9. ஜெய்ஸ்வால். 10. ராகுல் டெவாட்டியா, 11. ரியான் பராக் #IPL2020 #CSKvRR