பாடசாலைகளிலும் முதலாம் மற்றும் இரண்டாம் தர வகுப்புகள் ஆரம்பம்

0
3

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் முதலாம் மற்றும் இரண்டாம் தர வகுப்புகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனைத்து முன்பள்ளிகளும் அன்றைய தினமே திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அனைத்து தேசிய கல்வியியற்கல்லூரியின் முதலாம் ஆண்டு கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 17 ஆம் திகதியும் இரண்டாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 31 ஆம் திகதியும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அனைத்து ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளினதும் முதலாம் மற்றும் இரண்டாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, அனைத்து அரச பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மூன்று கட்டங்களின் கீழ் திறக்கப்படவுள்ளன.