பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் திகதி..? கல்வியமைச்சின் செயலாளர் அறிக்கை…

0
62

மீண்டும் பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானத்தை இன்றைய தினம் அறிவிக்கவுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

நாட்டில் கடந்த வாரம் முதல் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்திருந்தது.

இதனை தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரையில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, கற்றல் செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுப்பதற்கான கால எல்லை மற்றும் தினம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக சுகாதார அமைச்சிடம் கல்வி அமைச்சு கலந்துரையாடியிருந்தது.

இந்த நிலையில் அதற்கு உரிய பதில் கிடைக்க பெற்றுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2019 கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை விடைத்தாள் மீள்திருத்தத்திற்காக விண்ணப்பிக்கும் காலம் ஜுலை 31 வரை நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.